உள்ளூர் செய்திகள்
நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா சங்கரன்கோவிலில் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

சங்கரன்கோவிலில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

Published On 2022-05-16 10:04 GMT   |   Update On 2022-05-16 10:04 GMT
சங்கரன்கோவிலில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.
சங்கரன்கோவில்:

நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில்  ஆய்வு மேற்கொண்டார்.

சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் தினசரி சந்தை, பழைய நகராட்சி கட்டிடம் ஆகியவற்றை அகற்றிவிட்டு  கட்டப்பட உள்ள புதிய பேருந்து நிலையம் குறித்தும், புதிய நகராட்சி அருகே அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த காய்கறி சந்தை அமையும் இடங்கள் உள்ளிட்ட,  நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் சங்கரன்கோவில் நகராட்சியை மாநிலத்தில் முன்மாதிரி நகராட்சியாக மாற்ற  பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும், சங்கரன்கோவில் நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பகிர்மான குழாய் இணைப்புகளை ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நீர்த்தேக்க தொட்டிகளில் இணைக்க வேண்டும், சங்கரன்கோவில் நகராட்சிக்கு சாலை வசதி, வாறுகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

இதில் நெல்லை மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி, நெல்லை மண்டல பொறியாளர் சேர்மக்கனி, சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் பாலச்சந்தர், மேலாளர் மாரியம்மாள், பணிமேற்பார்வையாளர் கோமதிநயகம், கட்டிட ஆய்வாளர்  கஜேந்திரன், தேர்தல் பிரிவு அலுவலர் முருகன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News