உள்ளூர் செய்திகள்
முகாமை கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

செங்கோட்டையில் இலவச கண்சிகிச்சை முகாம்

Published On 2022-05-16 09:57 GMT   |   Update On 2022-05-16 09:57 GMT
செங்கோட்டையில் இலவச கண்சிகிச்சை முகாமினை கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
செங்கோட்டை:

செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் உள்ள சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் மணிமண்டப வளாகத்தில் வைத்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதிஉதவியுடன் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம், செங்கோட்டை பாரத் கியாஸ் ஏஜென்சி, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. தலைமைதாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினா்கள் சுடர்ஒளிராமதாஸ், சரஸ்வதி, முத்துப்பாண்டி பாரத் கியாஸ் மேலாளா் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

கேந்திர மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தனா்.

முகாமில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவ மனை மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டு கண்பரிசோதனை, ஆலோசனைகள் வழங்கினா்.

முகாமில் மொத்தம் 258 பேர் கலந்து கொண்ட னா். அதில் 46பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இலவசமாக கண்அறுவை சிகிச்சை அளி்க்கப்பட்டது. 42பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

மீதம் உள்ளோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கேந்திர தொண்டா் கண்ணன் பால்ராஜ், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.  விவேகானந்தா கேந்திர மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் கோமதிநாயகம், நன்றி கூறினார்.


Tags:    

Similar News