உள்ளூர் செய்திகள்
வாலாஜாவில் அ.தி.மு.க.வினர் ஆ–ர்ப்பாட்டம் செய்த காட்சி.

வாலாஜாவில் அ.தி.மு.க. ஆர்பாட்டம்

Update: 2022-05-16 09:37 GMT
வாலாஜாவில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் ெசய்தனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். 

இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சம்பத், மாவட்ட துணை செயலாளர் சம்மந்தம், மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.கே.நிர்மலா, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் மூர்த்தி,நகர செயலாளர்கள் மோகன்,சந்தோஷம், முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி, அம்மூர் பேரூர் செயலாளர் தினகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News