உள்ளூர் செய்திகள்
4 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

புளியந்தோப்பில் ரூ. 10 லட்சம் வாடகை பாக்கி: 4 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

Update: 2022-05-16 07:59 GMT
புளியந்தோப்பில் வாடகை செலுத்தாக 4 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர்:

புளியந்தோப்பு, டிம்லர்ஸ் சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் 5 கடைகள் இயங்கி வருகின்றன. இதில் உள்ள 4 கடைகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வாடகை செலுத்தப்படவில்லை. இதனால் வாடகை பாக்கி ரூ.10 லட்சம் வரை ஆனது.

இதுகுறித்து திரு.வி.க. நகர் மண்டல வருவாய் அலுவலர்கள் வாடகை பாக்கி செலுத்தக்கோரி கடை உரிமையாளர்களுக்கு பலமுறை நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் வாடகை செலுத்தப்படவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று காலை திரு.வி.க .நகர் மண்டல அலுவலரின் உத்தரவின் படி உதவி வருவாய் அலுவலர் முருகேசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்தாக 4 கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும் கடைகள் முன்பு நோட்டீஸ். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News