உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஜூன் 12-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Update: 2022-05-16 02:58 GMT
ஜூன் 12-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 93.55 சதவீதம் பேரும், 2-ம் தவணையை 81.85 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். 2 கோடி பேர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள். எனவே தடுக்கி விழுகிற இடமெல்லாம் தடுப்பூசி முகாம் என்கிற வகையில் ஜூன் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதுபோன்று மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தடுப்பூசி போடாதவர்கள் பெயர் பட்டியலை தயார் செய்து அவர்களுக்கு மருத்துவத்துறையும், மற்ற சேவை துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைத்து தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தமிழக மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.Tags:    

Similar News