உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளான எந்திரத்தை அகற்றும் பணி நடந்தது.

4 வழிச்சாலையில் லாரி கவிழ்ந்தது

Update: 2022-05-15 10:58 GMT
வாடிப்பட்டி அருகே 4 வழிச்சாலையில் லாரி கவிழ்ந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாடிப்பட்டி

மதுரையில் இருந்து கரூருக்கு கிரானைட் குவாரியில் கல் அறுக்கும் ராட்சத எந்திரத்தை  லாரியில் ஏற்றி சென்றனர். இந்த லாரி  திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அது எதிர்பாராதவிதமாக நகரி பகுதியில் 4 வழிச்சாலை யில் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் கல் அறுக்கும் ராட்சத எந்திரமும் நடு ரோட்டில் விழுந்தது.இதனால் மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு   வந்த போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.  கவிழ்ந்த லாரியை மீட்பு வாகனம் மூலம் அங்கிருந்து அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
Tags:    

Similar News