உள்ளூர் செய்திகள்
.

தாரமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Update: 2022-05-15 10:24 GMT
தாரமங்கலம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலியானார்.
தாரமங்கலம் :

தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் புகையிலைகாரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரங்கப்பன் (வயது 65). 

இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான தோட்டத்தில் காலைக்கடன் கழிக்க சென்றார். அப்போது நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தார்.  

இதில் மின்சாரம் பாய்ந்து ரங்கப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News