உள்ளூர் செய்திகள்
.

வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

Update: 2022-05-15 09:55 GMT
மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார்.
சேலம்:

சேலம் குகை பஞ்சம்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் மோகன் (வயது 27). இவர்  பெயிண்டர் வேலை  செய்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி சண்முகப்பிரியா என்ற மனைவி உள்ளார். 

இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக சண்முகப்பிரியா கருத்து வேறுபாடு காரணமாக மோகனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மோகன், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.

அவர் வர மறுக்கவே மனவேதனையில் இருந்த மோகன் நேற்று இரவு 11 மணியளவில் வீட்டில் வைத்து  பிளேடால் தனது கழுத்தை தன்னைத்தானே அறுத்துக் கொண்டார்.இவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மோகனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து  செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News