உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பேசிய காட்சி.

நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜர்,இந்திராகாந்தி சிலைகள் நாளை மாலை திறப்பு- முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் அழைப்பு

Update: 2022-05-15 09:36 GMT
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நாளை மாலை நடைபெறும் காமராஜர், இந்திராகாந்தி சிலை திறப்பு விழாவில் திரளாக கலந்து கொள்ள முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனர் அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை:

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில்  காமராஜர், இந்திராகாந்தி சிலை திறப்பு விழா நாளை (திங்கட்கிழமை) மாலை நடக்க இருக்கிறது. 

இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் சிலை அமைப்பு குழு தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான தனுஷ்கோடி ஆதித்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட காமராஜர், இந்திராகாந்தி சிலைகள் நாளை திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக வைக்கப் பட்டிருந்த சிலைகள் 30 ஆண்டுகள் பழமையானது. அதனை புனரமைத்து பீடத்தை சற்று உயர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாளை திறக்கப்படுகிறது. 

இந்த சிலைகளை திறந்து வைப்பதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிெமாழி எம்.பி மற்றும் பல முக்கிய தலைவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்படுகிறது.
 
வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் இருந்து கொக்கிரகுளம் வரை பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து வரவேற்பு அளிக்கின்றனர்.
 
விழாவில் நெல்லை மேற்கு, கிழக்கு, மாநகர் மாவட்டம், மாநில, வட்டார, நகர, மண்டல நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்திய காமராஜர், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த இந்திரா காந்தி ஆகியோர் சிலை திறப்பு விழாவில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்  கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நாளை நடைபெறும் விழாவிற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்குகிறார். 
நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ., தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  

சிலை அமைப்பு குழு செயலாளரும், மாநகர் மாவட்ட தலைவருமான சங்கரபாண்டியன் வரவேற்கிறார்.சிலை அமைப்பு குழு பொருளாளர் டியூக் துரைராஜ் தொகுப்புரை வழங்குகிறார். காமராஜர் சிலையை கே.எஸ். அழகிரியும், இந்திராகாந்தி சிலையை கனிமொழி எம்.பி.யும் திறந்து வைக்கின்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாநில சிறுபான்ைம நலவாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் ஞானதிரவியம், விஜய் வசந்த், எம்.எல்.ஏக்கள் அப்துல் வகாப், பிரின்ஸ், விஜயதாரணி, ராஜேஸ்குமார், செயல் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன் குமார மங்கலம், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், சிங்கப்பூர் தொழில் அதிபரும், தி.மு.க. அயலக அணியை சேர்ந்த மகா கிப்ட்ஸன், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு, முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏக்கள் வேல்துரை, ரவி அருணன், காமராஜர் சிலையை அன்பளிப்பாக வழங்கிய உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் சொக்கலிங்க குமார், பொரு ளாளர் ராஜேஸ்முருகன், நிர்வாகிகள் கவிபாண்டியன், முகமது அனஸ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News