உள்ளூர் செய்திகள்
மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்

திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாம்

Published On 2022-05-15 09:23 GMT   |   Update On 2022-05-15 09:23 GMT
திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் மற்றும் பிஇஎஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் என்விஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வி. பாரதி தலைமை தாங்கினார். அனைவரையும் செயலாளர் அருணகிரி வரவேற்றார். என்.வி.எஸ். சங்கத்தலைவர் ராஜா, டாக்டர் லீலா சுப்பிரமணியம் முகாமை தொடங்கி வைத்து பேசினார்கள்.

முகாமில் கர்ப்பிணிகளுக்கும் மற்றும் இருதய சிகிச்சை, எலும்பு பிரச்சனைகள், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு முகாமில் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. 
Tags:    

Similar News