உள்ளூர் செய்திகள்
முகாமில் யூனியன் சேர்மன் பாலசிங் சான்றிதழ் வழங்கிய காட்சி.

உடன்குடியில் பெண்களுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

Published On 2022-05-15 09:21 GMT   |   Update On 2022-05-15 09:21 GMT
தூத்துக்குடி மாவட்ட கால்நடை துறை சார்பில் உடன்குடியில் பெண்களுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
உடன்குடி:

தூத்துக்குடி மாவட்ட கால்நடை துறை சார்பில்  பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் உடன்குடியூனியன் பகுதியில் உள்ள பெண்களுக்கு பயிற்சி முகாம் உடன்குடி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.

முகாமை உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உடன்குடி கால்நடை உதவி மருத்துவர் சத்யா வரவேற்றார். உடன்குடி பேரூராட்சிதலைவர் ஹுமைரா அஸ்ஸாப், துணைத் தலைவர் மால் ராஜேஷ் முன்னிலை வகித்தனர்.

கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் முத்துகுமார், நெல்லை கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் ஜெனிசிஸ் இனிகோ ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு, பராமரிப்பு, தீவன மேலாண்மை, நோய் கட்டுப்படுத்துதல், தடுப்பூசி முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

குலசேகரன்பட்டினம் கால்நடை உதவி மருத்துவர் வினோத் குமார் இப்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். வேப்பங்காடு கால்நடை உதவி மருத்துவர் நந்தினி நன்றி கூறினார்.

நாளை (16-ந் தேதி) உடன்குடி யூனியனுக்குட் பட்ட பகுதியில் உள்ள விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஊனமுற்ற பெண்கள் என 100 பேரை தேர்வு செய்து 100 சதவீத மானியத்தில் தலா 5 ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு உடன்குடி கால்நடை ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆடுகளை வழங்குகிறார்.
Tags:    

Similar News