உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சாத்தான்குளம் அருகே கார் டிரைவருக்கு அடி உதை

Update: 2022-05-15 09:19 GMT
சாத்தான்குளம் அருகே கார் டிரைவர் ஒருவரை, 4 பேர் அடித்து உதைத்துள்ளனர். இது ெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள  புத்தன் தருவை சேர்ந்தவர் விஜயகுமார். கார் டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது காரில் திசையன்விளை சென்றுவிட்டு ஊர் பக்கம் உள்ள அம்மன் கோவில் அருகே வந்தபோது அதே ஊரை சேர்ந்த வரதராஜ பெருமாள், விஸ்வா, ராஜா, சாலமன் ஆகிய 4 பேர் விஜயகுமாரிடம், வண்டியில் அதிகமாக பாட்டு போடுகிறாய் என திட்டி உள்ளனர்.

மறுநாள் விஜயகுமார் காரில் அதே இடத்திற்கு வந்தபோது இந்த  4 பேர் வந்து இன்னும் ஊரை விட்டு காலி செய்ய வில்லையா எனக்கூறி விஜயகுமாரை தாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த கார் டிரைவர் விஜயகுமார் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் தலைமையிலான போலீசார் கார் டிரைவரை தாக்கிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News