உள்ளூர் செய்திகள்
தேரோட்டம் நடைபெற்ற காட்சி

தாராபுரம் அனுமந்தராய கோவில் தேரோட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு

Update: 2022-05-15 07:49 GMT
தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தாராபுரம்:

தாராபுரத்தில் புகழ்பெற்ற காடு அனுமந்தராய கோவில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இக்கோவிலில் இன்று மதியம் நடைபெறும் அன்னதானத்திற்கு பின்பு சாப்பிட்ட இலையில் பக்தர்கள் படுத்து அங்கப்பிரதட்சணம் செய்வர். இது உலகத்தில் வேறு எந்த கோவிலிலும்  நடக்காத நிகழ்வு ஆகும் . நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே. வி. ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே .எஸ். என். வேணுகோபால், சரஸ்வதி. தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News