உள்ளூர் செய்திகள்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரம் - தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

Update: 2022-05-14 14:29 GMT
காவலர்களுக்கு கடும் தண்டனை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் விசாரணை கைதிகளின் மர்ம மரணம் தடுக்கப்படும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் விசாரணை கைதிகளின் மர்ம மரணம் தடுக்கப்படும்.

தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் வேலியே பயிரை மேய்ந்ததற்கு சமமாகிவிடும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News