உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பெண்ணை அவதூறாக பேசிய 2 பேர் கைது

Update: 2022-05-14 09:57 GMT
மேலப்பாளையத்தில் பெண்ணை அவதூறாக பேசிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி சுடலியம்மாள் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். 

இவர் அண்ணாநகரை சேர்ந்த சுந்தர் என்பவர் மூலம் நாங்குநேரியை சேர்ந்த நம்பிராஜன் என்பவரிடம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. 

இந்த பணத்திற்கு உரிய வட்டி கொடுக்கவில்லை என கூறி நம்பிராஜன், சுந்தர் ஆகிய இருவரும் சுடலியம்மாள் வீட்டிற்கு சென்று அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து அவரது மகன் மாணிக்கம் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். 

 அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜன், சுந்தர் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News