உள்ளூர் செய்திகள்
தயாளலிங்கம்.

தூத்துக்குடி தே.மு.தி.க. மாநகர் மாவட்ட பொறுப்பாளராக தயாளலிங்கம் நியமனம்

Update: 2022-05-14 09:57 GMT
தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளராக தயாளலிங்கத்தை நியமித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளராக தயாளலிங்கத்தை நியமித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தயாளலிங்கம் தொடக்கத்தில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்திலும்,  அதனைத் தொடர்ந்து தே.மு.தி.க. தொடங்கப்பட்ட போது அக்கட்சியில்  தொண்டராகவும், மாவட்ட தொழிற்சங்க  பொருளா ளராகவும்  பதவி வகித்துள்ளார்.

மேலும் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளராகவும் பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொறுப் பாளராக, அவர் நியமனம்  செய்யப்பபட்டுள்ளார். 

இதையடுத்து தூத்துக்குடி மாநகர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
Tags:    

Similar News