உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

நெல்லை அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Update: 2022-05-14 09:47 GMT
நெல்லை அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

நெல்லையை அடுத்த கீழ முன்னீர்பள்ளம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி சிவகாமி.

இவர்களுக்கு சுப்பிரமணி (வயது 19)என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமு டெய்லராக வேலை பார்த்து வருகிறார். சுப்பிரமணி ஐ.டி.ஐ. படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.


இந் நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சுப்பிரமணியை திடீரென காணவில்லை . நள்ளிரவு 11 மணி அளவில் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மருதம் நகர் அருகே ரெயில் தண்டவாளத்தில் அவர் பிணமாக கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனே அலறி துடித்தபடி அவரது பெற்றோர் அங்கு சென்றனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணி உடலை மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சுப்பிரமணி வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்ததை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். 


இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுப்பிரமணி நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதற்கு முன்பு சுப்பிரமணி 2 முறை இதேபோல் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. 
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News