உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி - கணவருக்கு தீவிர சிகிச்சை

Update: 2022-05-14 09:41 GMT
தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:

தென்காசி மங்கம்மாள் சாலை அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி செல்வி (வயது 55). இவர்கள் 2 பேரும் நேற்று ஆய்க்குடி சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த கார், மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கணவன்-மனைவி 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு செல்வியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரங்கனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக ஆய்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த செல்வகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News