உள்ளூர் செய்திகள்
ரெயில்

விரைவு ரெயில் சேவையில் மாற்றம்: சென்னை-திருப்பதி ரெயில் ரத்து

Published On 2022-05-14 07:10 GMT   |   Update On 2022-05-14 07:10 GMT
திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 18-ந்தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்படும் விரைவு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.
சென்னை:

சென்னை கோட்டத்தில் பல்வேறு மார்க்கங்களில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால் விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 18-ந்தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்படும் விரைவு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல்- திருப்பதிக்கு 17, 18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் விரைவு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.

கே.எஸ்.ஆர். பெங்களூரு- சென்னை சென்ட்ரலுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

கோயம்புத்தூர்- சென்னை சென்ட்ரலுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரெயில் காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. மைசூர்- சென்னை சென்ட்ரலுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் அதிகாலை 5 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரெயில் காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல்-மைசூருக்கு 17, 18 ஆகிய தேதிகளில் மதியம் 1.35 மணிக்கு புறப்பட வேண்டிய அதிவிரைவு ரெயில் சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரெயில் காட்பாடி நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும்.

சென்னை-கோயம்புத்தூருக்கு 17, 18ந்தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரெயில் சென்னை சென்ட்ரல்- காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும்.

சென்னை சென்ட்ரல்- கே.எஸ்.ஆர். பெங்களூருக்கு 17, 18ந்தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரெயில் சென்னை சென்ட்ரல்- காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும். இது தவிர சில ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

இந்த தகவல் தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News