உள்ளூர் செய்திகள்
மருத்துவமனைக்கு பேட்டரி வழங்கப்பட்ட காட்சி.

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தடையில்லா மின்சார பேட்டரி

Update: 2022-05-13 09:36 GMT
செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தடையில்லா மின்சார பேட்டரி ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.
செங்கோட்டை:

செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவில் இரவில் ஏற்படும் மின்தடையின்போது உண்டாகும் இடையூறுகளை தவிர்க்கும் வகையில் தடையில்லா மின்சார பேட்டரி ஒன்று அத்தியாவசிய தேவையாக இருந்து வந்தது.

இதனையடுத்து மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜேஷ்கண்ணன் இதுகுறித்து செங்கோட்டை முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் தங்கவேலுவிடம் கூறினார்.  

உடனே தங்கவேலு தனது சொந்த நிதியில் ரூ.15,000 மதிப்பில் புதியதாக ஒரு மின்சார பேட்டரி ஒன்றை வாங்கி மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜேஷ்கண்ணனிடம் அன்பளிப்பாக வழங்கினார்.

செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் அனைத்து பணியாளா்கள் சார்பாக முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் தங்கவேலுவிற்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News