உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி

Update: 2022-05-13 09:32 GMT
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரத்தில் குளத்தில் மூழ்கி முதியவர் பலியானார்
நெல்லை:

சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள கே.எம்.அச்சம்பட்டி கீழ தெருவை சேர்ந்தவர் பாண்டி(வயது 66).

இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால், உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அங்குள்ள குலையம்பாறை குளத்தில் அவர் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். ஆனால் அதற்குள் பாண்டி இறந்துவிட்டார்.
Tags:    

Similar News