உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

திமுக 70 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறுவது பொய் - எடப்பாடி பழனிசாமி

Published On 2022-05-13 07:06 GMT   |   Update On 2022-05-13 07:06 GMT
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தது அ.தி.மு.க. அரசு என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்:

சேலத்தில் உள்ள மெய்யனூரில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களுக்கு வாழ்வளிக்கும் திட்டம் எதுவுமே நடைபெறவில்லை. கொரோனா காலத்தால் மக்களுக்கு தற்போது சோதனையான நேரம். இந்த நேரத்தில் சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது உண்மையிலேயே மக்களுக்கு செய்யப்படும் துரோகம்.

சட்டமன்ற தேர்தலில்ன் போது திமுக சார்பில் 500க்கு மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தனர். அதில் ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றி உள்ளனர். தி.மு.க. 70 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய்யாக செய்தியை பரப்பி வருகின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தது அ.தி.மு.க. அரசு. முதல்வர் ஸ்டாலினே நினைத்தாலும் வேளாண்மைக்கு எதிரான எந்த தொழிலையும் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News