உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல்-3 பேருக்கு வலைவீச்சு

Update: 2022-05-12 09:52 GMT
களக்காடு அருகே மேலகாடுவெட்டியில் விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டி, மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுப்பிர மணியன் (வயது 40). விவசாயி.

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செல்லப்–பாண்டிக்கும் கடந்த 2 மாதமாக இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

சம்பவத்தன்று சுப்பிரமணியன் வீடு அருகே நடப்பட்டிருந்த கல்லை செல்லப்பாண்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சுப்பிரமணியன்  என தட்டிக் கேட்டார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்லப்பாண்டி, அவரது மனைவி கோமதி, அதே ஊரைச்சேர்ந்த ரமேஷ் மனைவி மீனா ஆகியோர் சேர்ந்து சுப்பிரமணியனை கம்பால் தாக்கினர்.  மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதனால் காயம் அடைந்த சுப்பிரமணியன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி செல்லப்பாண்டி உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News