உள்ளூர் செய்திகள்
.

குமாரபாளைத்தில் காற்று, மழையால் மரம் சாய்ந்தது

Update: 2022-05-11 10:23 GMT
குமாரபாளைத்தில் காற்று, மழையால் மரம் சாய்ந்தது மின் கம்பம் உடைந்தது.
குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் காற்று மழையால் மரம் சாய்ந்து மின் கம்பம் நுனிப்பகுதி உடைந்தது. 

குமாரபாளையத்தில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. கிழக்கு காவேரி நகரில் பலத்த காற்றால் ஒரு மரம் மின் கம்பிகள் மீது சாய்ந்தது. 

இதன் பாரம் தாங்காமல் மின் கம்பத்தின் நுனி பகுதி உடைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்ததால், மின் இணைப்பு இரவில் துண்டிக்கப்பட்டது. மின் பணியாளர்கள் காலையில் வந்து மின் கம்பம் உடைந்ததை சீர் படுத்தி, மின் இணைப்பு கொடுத்தனர். 

மரம் விழுந்து மின் கம்பம் உடைந்ததால் சுமார் 14 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News