உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி பகுதியில் விற்பனைக்கு குவிந்துள்ள தக்காளி.

நாங்குநேரி பகுதியில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

Update: 2022-05-11 10:04 GMT
நாங்குநேரி பகுதியில் தக்காளி விளைச்சல் குறைவால் விலை அதிகரித்து உள்ளது.
வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டாரத்தில் விளைகின்ற தக்காளி, மிளகாய், வெள்ளரிக்காய், தடியங்காய், வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அனைத்தும் மூலக்கரைப்பட்டி தனியார் சந்தையில் விற்பனைக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி விலை கிலோ ரூ.10 ஆக இருந்தது. கடந்தசில வாரங்களாக பெய்த கன மழையினால்  தக்காளி பழுத்த உடனேயே செடியிலயே  வெடித்தன.

இதனால் இந்த வாரத்தில் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்தது. ஆகையால், நேற்று ஒரு கிலோ தக்காளி அதிகபட்ச விலையாக ரூ. 55 வரை சென்றது. இதனால் சில்லறை  விற்பனை கடைகளில் ரூ. 70 முதல் 75 வரைக்கும் விற்பனை ஆகியது. தற்போது திருமண விழா காலங்கள்  என்பதால் தக்காளி தேவையும் அதிகரித்து இருப்பதால் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.
Tags:    

Similar News