உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் தி.மு.க. அமைப்பு தேர்தல்

Update: 2022-05-11 09:55 GMT
பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தெற்கு மாவட்ட தி.மு.க.அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
உடுமலை:

திருப்பூர் புறநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள பேரூர் மற்றும் நகர கழக 15வது அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறும் நிகழ்ச்சி உடுமலையில் நடைபெற்றது.

பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தெற்கு மாவட்ட  தி.மு.க.அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான தி.மு.க.வினர் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். மாநில விவசாய அணி துணை செயலாளர் அந்தியூர் சிவா, தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விண்ணப்பங்களை வழங்கினர். நிகழ்ச்சியின்போது தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முபாரக் அலி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News