உள்ளூர் செய்திகள்
உடன்குடியில் சின்டெக்ஸ் தொட்டியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓராண்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2022-05-10 09:52 GMT   |   Update On 2022-05-10 09:52 GMT
அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து சென்று மு.க.ஸ்டாலின் ஓராண்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
உடன்குடி:

உடன்குடி பேரூராட்சி 3-வது வார்டு பெரியதெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சின்டெக்ஸ் தொட்டி தொடக்க விழா நடந்தது. 3-வது வார்டு கவுன்சிலர் மும்தாஜ் பேகம் தலைமை தாங்கினார்.

உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், துணைச் சேர்மன் மீரா சிராசுதீன், உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப், துணைத் தலைவர் மால் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அதிகாரி பாபு வரவேற்றார். தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சின்டெக்ஸ் தொட்டியை திறந்து வைத்து பேசியதாவது:-

 தமிழ்நாட்டில் தி.மு. க. பதவியேற்று ஓராண்டு ஆகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து சென்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தும் போது, அது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தர வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்துகிறார்.

 அதுவும் அத்தியாவசிய கோரிக்கையான குடிநீர், தெருவிளக்கு போன்றவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஓராண்டில் வியக்க வைக்கும் அளவிற்கு சாதனை படைத்து வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக மக்களாகிய நாம் என்றும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

 இதில் பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜாண்பாஸ்கர், தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணி துணைசெயலாளர் உமரிசங்கர், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மகாவிஷ்ணு, இளங்கோ, ஜெயப்பிரகாஷ், சிராஜூதீன், அலாவுதீன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலாஜி, பஷீர் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் கவுன்சிலர் சலீம் நன்றி கூறினார்.
Tags:    

Similar News