உள்ளூர் செய்திகள்
கொலை

மீஞ்சூர் ரவுடி கொலையில் 5 பேர் கைது

Update: 2022-05-10 06:01 GMT
மீஞ்சூர் ரவுடி கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

மீஞ்சூர் அருகே உள்ள வாயலூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(வயது55). ரவுடியான இவர் மீது 3 கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. திருவெள்ளைவாயல் பகுதியில் பார் நடத்தி வருகிறார்.

நேற்று காலை மூர்த்தி பாரில் இருந்த போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த மோகன்ராஜ், , மணிகண்டன், எண்ணூரை சேர்ந்த கிஷோர், அருண்குமார், சுந்தர் ஆகிய 5பேரை போலீசார் கைது செய்தனர். ஜெயிலுக்குள் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட மூர்த்தி கடந்த 2020ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். அப்போது போது சிறையில் இருந்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த மணிகண்டனை அவர் அடிக்கடி வேலை வாங்குவதும் பொருட்கள் வாங்கி கொடுக்க சொல்வமாக மிரட்டி இருக்கிறார்.

இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் மூர்த்தி ஜெயிலில் இருந்து வெளியே வந்தபின்னரும் மணிகண்டனை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நினைத்த மணிகண்டன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மூர்த்தியை தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News