உள்ளூர் செய்திகள்
முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.

செங்கோட்டை நகர்மன்ற அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2022-05-09 10:07 GMT   |   Update On 2022-05-09 10:07 GMT
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.  நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமைதாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

நகராட்சி ஆணையாளா் இளவரசன், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதாரஆய்வாளா் பழனிச்சாமி, நகர்நல மருத்துவ அலுவலா் டாக்டா் பிரியதர்ஷினி, பொறியாளா்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

மேலாளா் கண்ணன் வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து செங்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள 24 வார்டுகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்களை கண்டறிந்து தடுப்பூசி போடப்பட்டது.  

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் நகர்மன்ற உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

முகாமில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயனுலாப்தீன், மாவட்ட சுகாதார நலக்கல்வியாளா் மாரிமுத்து, தாசில்தார் கந்தசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் பொது–மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா்லெட்சுமணன், சுகாதார மேற்பார்வையாளா் முத்துமாணிக்கம், காளியப்பன், செவிலியா்கள், துாய்மை இந்தியா திட்டப்பணியாளா்கள், துாய்மை பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News