உள்ளூர் செய்திகள்
இந்து முன்னணியினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்தபடம்.

பாளையில் இந்து முன்னணி உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

Published On 2022-05-09 10:01 GMT   |   Update On 2022-05-09 10:01 GMT
பாளையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இந்து முன்னணி உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நெல்லை:
 
தாமிரபரணி ஆற்றுடன் கருமேனியாறு, நம்பியாற்றை இணைக்கும் வகையில் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இதற்கான பணிகள் நடந்த வந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. தற்போது திட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திடடப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 அதன்படி மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா தலைமையில் துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார், நிர்வாகி குற்றாலநாதன் உள்ளிட்டோர் பாளை ஐகிரவுண்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.

அவர்களுடன் பொதுப்பணித்துறை என்ஜினீயர் ஆசைத்தம்பி, உதவி போலீஸ் கமிஷனர் விவேகானந்தன் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்று  இந்து  முன்னணியினர் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News