உள்ளூர் செய்திகள்
.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரே நாளில் 1.19 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2022-05-09 09:56 GMT   |   Update On 2022-05-09 09:56 GMT
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரே நாளில் 1.19 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சேலம்:

தமிழகம் முழுவதும் கொரோனா 4-வது அலை பரவாமல் தடுக்க தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்லதுவதற்காக மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டம்  சேலம் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 27 லட்சத்து 99 ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசியும், 22 லட்சத்து 47 ஆயிரத்து 998 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று 29-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் 5 ஆயிரத்து 540 இடங்களில் நடந்தது. இந்த பணியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். முகாம் நடைபெறும் இடத்துக்கு பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று நீண்ட வரிசையில் நின்று, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நேற்று ஒரே நாளில் 87 ஆயிரத்து 74 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் 29-ம் கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம்  அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 2,769 மையங்கள் மூலமாக கொரோனா நோய் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1,400 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

1.19 லட்சம் பேருக்கு மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாமில் 32,085 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரே நாளில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 159 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News