உள்ளூர் செய்திகள்
.

சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

Published On 2022-05-09 09:55 GMT   |   Update On 2022-05-09 09:55 GMT
சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடந்தது.
சேலம்:

சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. 

தற்போது 2-ம் கட்ட நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து 3-ம் கட்ட பயிற்சி வருகிற 12-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது. 

அதைத்தொடர்ந்து 4-ம் கட்ட பயிற்சி வருகிற 26-ந் தேதி முதல் ஜூன் மாதம் 8-ந் தேதி வரையும், 5-ம் கட்ட பயிற்சி 9-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும், 6-ம் கட்ட பயிற்சி 23-ந் தேதி முதல் ஜூலை மாதம் 6-ந் தேதி வரையும் நடைபெறுகிறது.

சிறுவர், சிறுமிகளுக்கு காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சி நடைபெறுகிறது. இதுதவிர பொதுமக்கள் காலை 9 மணி முதல் 4 மணி வரை நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

மேலும் அவர்கள் குளிக்க வரும் போது ஆதார் கார்டு காண்பிக்க வேண்டும். இதற்கான கட்டணம் ரொக்கமாக பெற மாட்டாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை குளிக்க யாருக்கும் அனுமதி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News