உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

விளைச்சல் அதிகரிப்பால் நிலக்கடலை விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-05-09 06:08 GMT   |   Update On 2022-05-09 06:08 GMT
ஜனவரி மாதம் ஒரு ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்தேன். இரண்டு முறை மட்டுமே மருந்து தெளிக்கப்பட்டது.
திருப்பூர்:

போதிய விளைச்சல் கிடைத்துள்ளதால் பல்லடம் அருகே நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

இதுகுறித்து பல்லடம் அருகே காளிநாதம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி கூறியதாவது:-

ஜனவரி மாதம் ஒரு ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்தேன். இரண்டு முறை மட்டுமே மருந்து தெளிக்கப்பட்டது. பூச்சி, நோய் தாக்கம் உள்ளிட்ட எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் கூட்டமாக வரும் மயில்கள் நிலக்கடலையை கொத்தி விடுகின்றன. 

போதிய அளவு மழையும் கிடைத்ததால், செடி ஒன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட காய்கள் பிடித்துள்ளன. இது நல்ல விளைச்சல். ஏக்கருக்கு 1,500 கிலோ வரை கிடைக்கும். கிலோ ரூ.55 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. 

தற்போது 65-க்கு மேல் விற்பனை ஆகின்றது. ஓரிரு நாட்கள் காய் வைத்த பின், விற்பனைக்கு அனுப்பப்படும். நிலக்கடலையில் போதிய லாபம் உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News