உள்ளூர் செய்திகள்
.

29-வது சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

Update: 2022-05-07 10:17 GMT
சேலம் மாவட்டத்தில் நாளை 29-வது சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
சேலம்:

தமிழகத்தில் கடந்த 2021 ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதிற்கு மேற்பட்ட 27 லட்சத்து 99 ஆயிரத்து 723 பேருக்கு முதல் தவணையும், 22 லட்சத்து 47, ஆயிரத்து 998  பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 74 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 
தற்பொழுது தமிழக அரசின் உத்திரவிற்கிணங்க,  வாரம் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

சேலம் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி தொடங்கி கடந்த ஏப்ரல் 30-ந்தேதி வரை  28 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 7 லட்சத்து 58 ஆயிரத்து 221 பேருக்கு முதல் தவணையும் 10 லட்சத்து 42 ஆயிரத்து 153 பேருக்கு 2-ம் தவணையும் என மொத்தம் 18 லட்சத்து 11, ஆயிரத்து 225 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

 நாளை(ஞாயிற்றுக்கிழமை) 29-வது சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. காலை 7  மணி முதல் மாலை 7 மணிவரை முகாம்கள் நடைபெறவுள்ளது. இதற்கென ஊரகப்பகுதியில் 4,565 மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் 675 என மொத்தம் 5,240 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அதற்கென தடுப்பூசி செலுத்து–பவர்கள்,  கணினியில் பதிவு மேற்கொள்பவர்கள் தகுதிவாய்ந்த பயனாளி–களை அழைத்து வருப–வர்கள் என   19,500-க்கு மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் தற்பொழுது கோவிசீல்டு தடுப்பூசி மருந்து 3,43,790 டோஸ்களும், கோவேக்சின் 1,63,390 டோஸ்களும், கோர்பெவாக்ஸ் 59,560 கையிருப்பில் உள்ளன.  இதற்கென ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்–கூடிய 6,65,658  ஊசி  குழல்கள் கையிருப்பில் உள்ளன. 

இந்தமுகாமில் 1.20 இலட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம்  செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்–பிடித்து ஆதார் அட்டை, குடும்பஅட்டை, வாக்காளர்  அடையாள அட்டை,  பான் அட்டை போன்ற அடையாள ஆவ–ணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து தடுப்பூசி  செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News