உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை படத்தில் காணலாம்.

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது

Update: 2022-05-07 09:54 GMT
கர்நாடகாவிற்கு 15 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி, 

தருமபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில்   போலீசார் தருமபுரி-பென்னாகரம் சாலை ஒகேனக்கல் பைபாஸ் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது கர்நாடகாவுக்கு ரேசன் அரிசி கடத்துவதற்காக குடோனில் ஒருவர் பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் உடனே அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது ரேசன் அரிசி கடத்தியதாக பென்னாகரம் தாலுக்கா வள்ளுவன் (வயது63), அலையபுரத்தை சேர்ந்த பசுவராஜ் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவ தற்காக  மறைத்து வைத்திருந்த  50 கிலோ எடையுள்ள 300 மூட்டைகள் என மொத்தம் சுமார் 15000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News