உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் அருகே உள்ள சந்தனமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி சந்தன மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
கடந்த 4-ந்தேதி அன்னதானத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில் அன்றைய தினமே 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு சந்தனமாரி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து 5-ந்தேதி மாலை தீர்த்த குடம் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு வில்லிசை மற்றும் கரகாட்டம், சப்பர வீதி உலா நடைபெற்றது.
நேற்று காலையில் பூ வளர்த்தல், மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடை பெற்றது.
விழாவில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இன்று காலை 7 மணிக்கு கிடா வெட்டுதல், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவர் சமுதாயத்தினர் செய்துள்ளனர்.