உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

சட்டசபையில் இன்று ஓராண்டு சாதனை உரையாற்றிய மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

Update: 2022-05-07 09:41 GMT
அ.தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்ததால் இன்று அவர்களை தவிர்த்து மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை:

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு காலத்தில் செய்த சாதனையை பட்டியலிட்டு பேசினார். 54 நிமிட நேரம் அவர் உரையாற்றினார். அதன் பிறகு சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

அ.தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்ததால் இன்று அவர்களை தவிர்த்து மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரம் அவர்கள் பாராட்டி பேசினார்கள்.

Tags:    

Similar News