உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி

Published On 2022-05-07 09:37 GMT   |   Update On 2022-05-07 09:37 GMT
திருச்சி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
திருச்சி:


திருச்சி திருவெறும்பூர் நடராஜபுரம் பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இங்குள்ள செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.

கொரோனா மற்றும் புதிய கட்டுப்பாடுகளால் சில ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்பட வில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடந்தது.

இந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 600-க்கும் மேற்பட்ட காளைகள்  பங்கெடுத்தன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் தீரத்துடன் அடக்கினர்.

போட்டியில் ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காளைகளை அடக்கிய காளையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியினை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 3000-க்கும்மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.  கொரோனா கட்டுப்பாடுகள்  நீக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு இருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதையொட்டி திருெ்வறும்பூர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News