உள்ளூர் செய்திகள்
சரத்குமார்

அன்னையர் தினம்- சரத்குமார் வாழ்த்து

Update: 2022-05-07 06:22 GMT
தியாக உள்ளம் நிறைந்த அனைத்து அன்னையருக்கும், இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகளை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

உலகில் தன்னலம் பாராத உயர்ந்த உறவாக நிலைபெற்றிருக்கும் அன்னையர்கள், புன்னகை வீசும் தன் பிள்ளைகளின் முகம்கண்டு, சோகம் மறைத்து, எத்தனை வயது கடந்தாலும், பிள்ளைகளை குழந்தைகளாகவே பாவித்து மகிழ்கிறார்கள். அதுபோல, பிள்ளைகளும் வயது முதிர்ந்த அன்னையரை குழந்தைகளாக பாவித்து, அவர்களின் தேவையை முழுமனதுடன் பூர்த்தி செய்திட வேண்டும்.

இந்த அன்னையர் தினத்தில், விடுமுறை நாட்களிலும் ஓய்வின்றி சுழன்று பணிபுரியும் அன்னையரின் பணிசுமை குறைத்து சற்று ஓய்வு அளிப்பதே சிறந்த பரிசாக இருக்கும். கருணை உள்ளத்தோடு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் அன்னையருக்கும், தியாக உள்ளம் நிறைந்த அனைத்து அன்னையருக்கும், இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News