உள்ளூர் செய்திகள்
காய்கறி கடை முன்பு மயங்கி விழுந்து இறந்த முதியவர் பாண்டி.

வெயில் கொடுமையால் முதியவர் சாவு

Update: 2022-05-06 09:52 GMT
வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து முதியவர் இறந்தார்.
சிவகங்கை

சிவகங்கையை அடுத்துள்ள ஊத்திக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 70). மாட்டுவண்டி ஓட்டும் தொழிலாளி.  இவர் தனது வீட்டிற்கு தேவையான காய்கறி வாங்க சிவகங்கை நேரு பஜார் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தார். 

அங்குள்ள வாலாஜா நவாப் பள்ளிவாசல் அருகே உள்ள காய்கறி கடையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இறங்கியவர் வெயில் கொடுமையால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். பின்னர் அவர் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அங்குவந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரின் உயிரிழப்பை உறுதி செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். மேலும் காவல்து றையினர் கண்டு கொள்ளாததால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக முதியவரின் உடல் அங்கேயே கிடந்தது.  

பின்னர் பள்ளிவாசல் ஜமாத்தினர் முதியவரின் உடலை  தங்களது ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

வெயில் கொடுமைக்கு முதியவர் பலியான சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News