உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 தேர்வினை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.

பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது

Update: 2022-05-05 09:33 GMT
பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது : தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன : கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 85 மையங்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நடைபெறுகிறது. நாகர்கோவில் எஸ். எல்.பி பள்ளியில் நடைபெற்ற தேர்வு முகாமை கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்வு குமரி மாவட்டத்தில் 23 ஆயிரத்து 272 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். 85 மையங்களில் நடைபெறும் தேர்வை 90 பறக்கும் படையினர் கண்காணித்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. 

சென்னையில் இருந்தும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதற்காக வந்துள்ளார். அவரும் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் .தேர்வுகள் முடிந்த பிறகு நான்கு மையங்களில் விடைத்தாள்களை கொண்டு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள்  வைக்கப்பட உள்ள மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் 2 மையங்களில் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் டதி பள்ளியிலும் மார்த்தாண்டம் புனிதஜோசப் பள்ளியிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறும்.

தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News