உள்ளூர் செய்திகள்
.

கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்டு

Update: 2022-05-05 07:09 GMT
தருமபுரி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி, 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களிடம் மதுவகைகளை அடக்க விலையைவிட கூடுதலாக 5 முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்தனர்.

பீர் வகைகளுக்கு 10 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்தனர். இது குறித்த புகாரால் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, மாவட்டத்தின் பல டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதில், கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்ற, 15 பேரை இடமாற்றம் செய்ததுடன் 5 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News