உள்ளூர் செய்திகள்
மாலை நேர சிறப்பு பல் சிகிச்சை பிரிவை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

சிறப்பு பல் சிகிச்சை பிரிவு- ரங்கசாமி தொடங்கி வைத்தார்

Update: 2022-05-05 06:00 GMT
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லூரியில் மாலை நேர சிறப்பு பல் சிகிச்சை பிரிவை ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

இந்திரா நகர் தொகுதிகுட்பட்ட கோரிமேட்டில் புதுவை அரசின் மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. 

இந்த கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் மாலை நேர சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி, தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான ஏ.கே.டி. ஆறுமுகம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

மேலும் இக்கல்லூரியில் புதிதாக பொருத்தப் பட்டுள்ள 64 சி.சி.டி.வி. கேமராக்களையும் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், சுகாதார நலவழித்துறை இயக்குனர் டாக்டர் ராமுலு மற்றும் மகாத்மாகாந்தி பல்  மருத்துவ பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் கென்னடி பாபு செய்திருந்தார்.
Tags:    

Similar News