உள்ளூர் செய்திகள்
லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம் நடந்தது.

மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி சிறப்பு யாகம்

Update: 2022-05-04 10:30 GMT
தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.
அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவிலில் 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டி லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்புயாகம் நடந்தது. 

இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக லட்சுமி ஹயக்ரீவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16வகை சிறப்பு அபிஷேகம், மற்றும் மலர் அலங்காரம் நடைபெற்றது.  மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பேனா உள்ளிட்ட எழுது உபகரணங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் அய்யப்ப முருகபக்தர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News