உள்ளூர் செய்திகள்
முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை பொறியாளர்களுக்கு புதிய வாகனங்கள்

Update: 2022-05-03 04:33 GMT
முல்லை பெரியாறு அணை பகுதி பொறியாளர்களுககு 2 புதிய பொலிரோ வாகனங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது.

கம்பம்:

முல்லைப் பெரியாறு அணை பரமரிப்புக்கு கம்பத்தில் சிறப்பு கோட்ட அலுவலகம் செயல்படுகிறது. இங்கு செயற்பொறியாளர், உதவிக்கோட்ட பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

பொறியாளர்களின் பயன்பாட்டுக்காக ஏற்கனவே 2 ஜீப் வாகனங்கள் இருந்தன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசு பொதுப்பணித்துறை சார்பில் புதிதாக 2 பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த வாகனங்களை செயற்பொறியாளர் சாம் இர்வின் பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து செயற்பொறியாளர் சாம் இர்வின் கூறியதாவது, கடந்த மாதம் அணை பகுதியில் பேரிடர் காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பு கோட்டத்துக்கு தகவல் தொடர்புக்காக சாட்டிலைட் கைப்பேசி வழங்கப்பட்டது. தற்போது அதிகாரிகள் விரைந்து செல்வதற்காக 2 புதிய பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

Tags:    

Similar News