உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை மாவட்டத்தில் தக்காளி விலை இருமடங்கு உயர்வு

Update: 2022-05-01 09:04 GMT
நெல்லை மாவட்டத்தில் தக்காளி விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சற்று குறைந்திருந்தது.

தொடர்ந்து கோடைமழை பெய்ததால் நல்ல விளைச்சல் காரணமாக டவுன், பாளை மார்க்கெட்டு களுக்கும், நயினார்குளம் மார்க்கெட்டுகளுக்கும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்டவை அதிக அளவில் கொண்டு வரப்பட்டன.

இதனால் கடந்த 21-ந்தேதி வரையிலும் தக்காளி ஒரு கிலோ ரூ.32-க்கும், கத்தரிக்காய் ரூ.16-க்கும் விற்பனையானது. அடுத்த 2 நாட்களில் தக்காளி ரூ.8 அதிகரித்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. கத்தரிக்காய் ரூ.18-க்கு விற்கப்பட்டது.

கடந்த 25-ந்தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.24-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  மறுநாள் கத்தரிக்காய் விலை ரூ.30 ஆனது. தொடர்ந்து கத்தரிக்காய் 2 நாட்களுக்கு முன்பு ரூ.34 ஆக அதிகரித்தது.

இந்நிைலயில் நேற்று தக்காளி விலை ரூ.54 ஆக உயர்ந்தது. மொத்த காய்கறி மார்க்கெட்டில் விலை உயர்ந்ததால், சில்லறை விற்பனை கடைகளில் அவற்றின் விலை ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் விற்கப்பட்டது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிக அளவில் தக்காளி வரத்து இருக்கும். தற்போது இங்கு விளைச்சல் இல்லை.

இதனால் பெங்களூரில் இருந்து தான் தக்காளியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. அங்கு ஒரு பெட்டி தக்காளி ரூ.1,800 வரை விலைபோகிறது. அதில் 28 கிலோ இருக்கும். மார்க்கெட்டுக்கு வந்து சேர்வதற்குள் ஒவ்வொரு பெட்டியிலும் 1 கிலோ தக்காளி நசுங்கி போய்விடும்.

இதன் காரணமாக 27 கிலோ தக்காளிக்கு நாங்கள் எங்களது செலவு எல்லாம் போக குறைந்த அளவு லாபம் வைத்து விற்றாலே ரூ.50-ஐ தாண்டி விடுகிறது.

கத்தரிக்காய் வரத்து தற்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வரத்தொடங்கி உள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது என்றனர்.
Tags:    

Similar News