உள்ளூர் செய்திகள்
கமல்ஹாசன்

உழைப்பாளர் தினம்- கமல்ஹாசன் வாழ்த்து

Update: 2022-05-01 05:55 GMT
சர்வதேசத் தொழிலாளர் நாள் இயக்கம் இன்று உலகம் முழுமையும் தொழிலாளருக்கு பாதுகாப்பாய் நிற்கிறது என்று கமல்ஹாசன் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சிகாகோ வீதிகளில் பொறியாய் புறப்பட்டு, ஐரோப்பாவில் படர்ந்து, சோவியத் ரஷ்யாவில் ஆக்க நெருப்பாகக் கொழுந்துவிட்ட சர்வதேசத் தொழிலாளர் நாள் இயக்கம் இன்று உலகம் முழுமையும் தொழிலாளருக்கு பாதுகாப்பாய் நிற்கிறது. தொழிலாளர் இயக்கச் செயல்பாட்டாளர்களை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News