உள்ளூர் செய்திகள்
சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-30 09:44 GMT
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் இன்று சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:

பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் நட்சத்திர வெற்றி வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் தங்கராஜ், சின்னச்சாமி, மணிமாறன், பாபு, தங்க மாரியப்பன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் சரத் கண்ணன், அழகேசன், அழகேச ராஜா, முருகேசன், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News