உள்ளூர் செய்திகள்
கருத்தரங்கு நடந்த போது எடுத்த படம்.

சாகுபுரத்தில் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு

Update: 2022-04-30 09:31 GMT
பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் சாகுபுரத்தில் நடைபெற்றது.
ஆறுமுகநேரி:

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன கலைய ரங்கத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது.

டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் ஆலோசனையின் பேரில் டி.சி.டபிள்யூ. நிறுவனம், கமலாவதி மேல்நிலைப்பள்ளி, சாகுபுரம் அரிமா சங்கம், சாகுபுரம் ஐ.எஸ்.டி.டி. ஆகியவற்றின் சார்பில் நடந்த இந்த கருத்தரங்கிற்கு நிறுவனத்தின் உதவி துணை தலைவர் மீனாட்சி சுந்தரம், மூத்த பொதுமேலாளரும் கமலாவதி பள்ளி நிர்வாகியுமான ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் முதல்வர் அனுராதா வரவேற்று பேசினார்.திருச்செந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் மோகனன் கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.சென்னை எம்.ஐ.டி. முன்னாள் டீன் தியாகராஜன், கல்வி வழிகாட்டி ஆலோசகர் ரவி சேஷாத்ரி ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி, காயல்பட்டி னம், வீரபாண்டியன்பட்டினம், ஆத்தூர், பழையகாயல், குரும்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். டி.சி.டபிள்யூ.துணை மேலாளர் பிரகாஷ் நன்றி கூறினார். நிறுவனத்தின் மக்கள் தொடர்பு துறையினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Tags:    

Similar News