உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

குமரன் நினைவிடத்தில் புகைப்பட கண்காட்சி மையம்

Published On 2022-04-30 07:22 GMT   |   Update On 2022-04-30 07:22 GMT
குமரன் நினைவிடத்தில், மாவட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி மையம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
திருப்பூர்:
 
தமிழக சட்டசபையில்நடந்த மானிய கோரிக்கையில், மாவட்டம்தோறும் தியாகிகள் புகைப்பட கண்காட்சி மையம் அமைக்கப்படும் என  செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். இதையடுத்து திருப்பூரில்உள்ள குமரன் நினைவிடத்தில் புகைப்பட கண்காட்சி மையம் அமைக்கும் பணி துவக்கப்பட்டுவிட்டது.

ரெயில் நிலையம் அருகே தியாகி குமரன் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு, மாவட்டத்தில் உள்ள தியாகிகளின் புகைப்படங்களை வைப்பதற்கான உள்கட்டமைப்பு பணிகள் ஜரூராக நடந்துவருகிறது.

மாவட்டத்தை சேர்ந்த 60 சுதந்திர போராட்ட தியாகிகள், மொழி போர் தியாகிகள், தமிழறிஞர் 28 பேர் என, மொத்தம் 88 பேரின் பெயருடன் கூடிய புகைப்படங்கள் இடம்பெற உள்ளன. தியாகிகளின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய புத்தகமும் வைக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News